CINEMA
“நாம் யார் என்பதை அடுத்தவர் முடிவு செய்ய கூடாது…” ஒரு தாயாக, பெண்ணாக நான் சொல்வது….! மனம் திறந்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய்….!!

உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இருவர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், ராவணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நாம் யார் என்பதை சோசியல் மீடியாவில் வெளியிடப்படும் போஸ்டுகள், லைக் மற்றும் கருத்துகள் மூலம் தேர்வு செய்கிறார்கள்.
நாம் தான் சோசியல் மீடியா தளங்களுக்கு அந்த முக்கியத்துவத்தை கொடுத்துள்ளோம். ஆனால் அதில் வரும் செய்திகளை பயனுள்ள செய்திகளாக இல்லை. சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது சோசியல் மீடியா செய்திகள். சமூக ஊடகங்களுக்கும், சமூக அழுத்தத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நாம் யார் என்பதை அடுத்தவர் முடிவு செய்யக்கூடாது. இதை நான் ஒரு பெண்ணாகவும் தாயாகவும் கூறுகிறேன் என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.