CINEMA
இதுதான் என்னுடைய கடைசி படம்… ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகர் அமீர்கான்..!!

ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர் தான் நடிகர் அமீர்கான். கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனையடுத்து தற்போது அவர் நடித்திருக்கும் Sitaare Zameen Par என்ற படம் ஜூன் இருபதாம் தேதி ரிலீஸ் ஆகிறது. அது நல்ல வசூலை ஈட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் அமீர்கான் அளித்த பேட்டி ஒன்றில், “தான் எடுக்க போகும் மகாபாரதம் தான் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அது என்னுடைய கனவு படம். அந்த படத்தை மட்டும் நான் எடுத்து விட்டால் அதன் பிறகு நான் செய்வதற்கு எதுவுமே கிடையாது” என்று கூறியுள்ளார்.