LATEST NEWS
சாக்லேட் பாயாக கொண்டாடும் நடிகர் மாதவனின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. வெளியான தகவல்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ராக்கெட்டரி நம்பி விளைவு. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பின்னணியை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனை மாதவன் இயக்கியுள்ளார். இந்தி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது.
இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. இதனிடையே மாதவனுக்கு வேதாந்த் மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வேதான் மூன்று தங்க பதக்கங்களையும் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் மாதவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவரின் சொத்து மதிப்பு 105 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மும்பையில் ஆடம்பர பங்களா மற்றும் சென்னையில் 18 கோடி மதிப்பில் ஒரு வீடு உள்ளது. மேலும் ஒரு படத்திற்கு ஆறு கோடி முதல் 8 கோடி வரை சம்பளம் பெற்று வரும் மாதவன் விளம்பரங்கள் மூலமாகவும் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
