‘தசாவதாரம்’ படத்தில் நடிகர் கமல் 10 வேடங்களில் நடித்துள்ள கதாபாத்திரம் என்னன்னு தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘தசாவதாரம்’ படத்தில் நடிகர் கமல் 10 வேடங்களில் நடித்துள்ள கதாபாத்திரம் என்னன்னு தெரியுமா?..

Published

on

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான படம் தசாவதாரம்.  இந்திய தமிழ் மொழி அறிவியல் புனைகதைத் திரைப்படமாகும் . கதை வசனம் எழுதியவர் நடிகர்  கமல்ஹாசன்.இப்படத்தில் கமல் ஹாசன்,அசின்,மல்லிகா, ஷெராவத்  போன்ற பிரபலகள் நடித்துள்ளனர்.

1)வைணவராக ரங்கராஜ நம்பி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement


2)உயிரித் தொழில்நுட்ப அறிவியலாளர் நாத்திகராக கோவிந்த் ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர்  கமல்ஹாசன் இப்படத்தில் பத்து வித்தியாசமான வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.நடிகை அசின் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.ஜெயபிரதா மற்றும் மல்லிகா ஷெராவத் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

3)சிஐஏ அமைப்பின் முன்னாள் ஊழியராகவும் ,கொலையாளியாகவும்  கிறிஸ்டியன் பிளெட்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement


4)தெலுங்கு RAW அதிகாரியாக பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விஞ்ஞானி கோவிந்த் மீது கவனம் செலுத்துகிறது. அவர் ஒரு பயங்கரவாத தேசத்திற்கு விற்க நினைத்த தனது ஊழல் முதலாளியிடமிருந்து ஒரு கொடிய வைரஸ் அடங்கிய குப்பியை திருட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

5)சித்தம் பிறழ்ந்த பாட்டியாக கிருஷ்ணவேணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

6)தலித் தலைவர், சுற்றுச்சூழல் போராளியாக வின்சென்ட் பூவராகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எல்லா நேரங்களிலும் அவர் ஃப்ளெட்சர் என்ற அமெரிக்கக் கூலிப்படையால் வேட்டையாடப்படுகிறார். பலர் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.  அவர்களின் அனைத்து கதைகளும் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமியின் தாக்குதலுக்குப் பிறகு இணைகின்றனர்.இதுவே படமாகும்.

Advertisement

7)பஞ்சாபி பங்கரா பாடகராக அவதார் சிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

8)இசுலாமியராக கலிஃபுல்லா கான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் வெளியான படம் . இப்படத்தின்  தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன். இப்படத்திற்கு ஹிமேஷ் ரேஷ்மியா  பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசையமைத்துள்ளார் .

9)ஜப்பானிய யயுற்சு தற்காப்புக் கலை வீரராக ஷிங்கென் நரஹஷி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் 60கோடி பஜ்ஜட்டில் உருவானது.ஆனால் படம் வெளியாகி  ₹200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் தமிழ் படமாகும்.இப்படத்தில் நடிகர் கமலஹாசன் 10 வேடங்களில் நடித்திருப்பார். தற்போது அந்த பத்து  10 வேடங்கள்.

10)ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராக ஜார்ஜ் புஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in