CRIME
அடக் கொடுமையே.. தீபாவளி ஷாப்பிங் சென்ற 26 வயது வீராங்கனை.. நெடுஞ்சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடந்த கொடூரம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர்-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையின் மகாராஜ்பூர் பகுதியில், மாநில அளவிலான பாக்ஸிங் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 26 வயது வீராங்கனை மந்தஷா குமாரி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னாவ் மாவட்டத்தின் கங்காகாட் பகுதியைச் சேர்ந்த இவர், ஜாஜ்மாவ் பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை மாலை தீபாவளிப் பண்டிகைக்காகப் பொருட்கள் வாங்கச் சந்தைக்குச் சென்ற மந்தஷா, அதன்பின் வீடு திரும்பவில்லை; அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நெடுஞ்சாலை ஓரமாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு, சனிக்கிழமை அன்று அது மந்தஷாவின் உடல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கொடூரக் கொலை குறித்து மந்தஷாவின் தாய் சஞ்சனா, மகளின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாகக் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அவரது தந்தை அந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு அடிக்கடி வந்து சென்ற ஒரு இளைஞர் மீது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து கான்பூர் மாநகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மந்தஷாவின் மொபைல் போன் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். தங்கப் பதக்கம் வென்ற இளம் வீராங்கனை ஒருவருக்கு நேர்ந்த இந்த விபரீத முடிவு அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
