CRIME
“என்னது.. நான்தான் மூன்றாவது கணவனா..?” 30 நாளில் ரூ.15 லட்சம் நகை, பணத்துடன் மாயமான கல்யாண ராணி.. மாமனார் வீட்டில் நியாயம் கேட்கப் போன கணவனுக்கு நடந்த திடுக்கிடும் ட்விஸ்ட்..!!
மூன்று திருமணங்கள் மற்றும் ஒரு ‘லிவ்-இன்’ உறவு எனப் பலரை ஏமாற்றி, மூன்றாவது கணவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான பிரகதி விஸ்வகர்மா என்ற பெண்ணின் மோசடிச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த விஷால் என்பவர், கடந்த மே 18, 2025 அன்று கோவிந்த் நகரில் உள்ள கரண் விருந்து மண்டபத்தில் இந்து முறைப்படி பிரகதி விஸ்வகர்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான சரியாக ஒரு மாதத்திற்குள், அதாவது ஜூன் 18, 2025 அன்று, தனது தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பிரகதி, வீட்டிலிருந்த சுமார் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானார்.
மனைவியின் திடீர் மாயத்தால் அதிர்ச்சியடைந்த விஷால், அவரைப் பற்றி விசாரித்தபோதுதான் பிரகதியின் அதிர்ச்சியூட்டும் பழைய வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது. பிரகதி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்துகொண்டவர் என்பதும், இது அவருக்கு மூன்றாவது திருமணம் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2017-ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி பெனாஜாபர் ஆரிய சமாஜ் கோவிலில் சோனு விஸ்வகர்மா என்பவரையும், அதே ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி ராவத்பூர் கிராமத்தில் உள்ள ஆரிய சமாஜ் கோவிலில் எட்டாவாவைச் சேர்ந்த சுமித் பாதம் என்பவரையும் அவர் திருமணம் செய்துள்ளார். மேலும், சில தகவல்களின்படி அவர் மொத்தம் ஐந்து திருமணங்கள் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தனது மனைவி முந்தைய திருமணங்களை மறைத்துத் தன்னை ஏமாற்றியதை அறிந்த விஷால், இது குறித்து நியாயம் கேட்பதற்காகத் தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு பிரகதி, அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் சேர்ந்து விஷாலைச் சரமாரியாகத் தாக்கியதோடு, அவரிடமிருந்து மேலும் ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரகதி கருக்கலைப்பு செய்துகொண்டு, தற்போது தனது காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் வசித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட கணவர் விஷால் வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தொடர் மோசடி மற்றும் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, விஷால் கான்பூரில் உள்ள பர்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், பிரகதி விஸ்வகர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி, குற்றச் சதி, முந்தைய திருமணத்தை மறைத்தல், கலவரம், தாக்குதல், கொலை மிரட்டல் மற்றும் பணம் பறித்தல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
