CRIME
“கர்மா யாரையும் சும்மா விடாது..” மாற்றுத்திறனாளி மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்ய முயன்ற இளைஞர்.. 2 நாட்களுக்கு முன் விதி வைத்த செம ட்விஸ்ட்.. திகில் பின்னணி..!!
பிரிட்டனில்குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரைக் காதலிப்பது போல் நடித்துத் திருமணம் செய்துகொண்டு, காரியம் முடிந்ததும் அவரைக் கழற்றிவிட்டுப் பாகிஸ்தானில் வேறொரு பெண் மருத்துவரைத் திருமணம் செய்யத் தயாரான இளைஞர், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பிரிட்டனுக்குச் சென்று அங்குக் குறுக்கு வழியில் விரைவாகக் குடியேறத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வெள்ளையினப் பெண் ஒருவருடன் நட்பாகி, அவரைத் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அந்த இளைஞர் மீதான உண்மையான காதலால், அந்தப் பெண் தனது பூர்வீக மதத்தை விட்டுவிட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறியதோடு, அவரைத் திருமணமும் செய்துகொண்டுள்ளார். மேலும், கஷ்ட காலங்களில் அவருக்குத் துணை நின்று, பணம் செலவழித்து, பிரிட்டனில் நிரந்தரமாகத் தங்குவதற்கான ஸ்பான்சர்ஷிப் உதவிகளையும் அந்தப் பெண் செய்து கொடுத்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு பிரிட்டனில் நன்கு செட்டில் ஆகி, அந்நாட்டு பாஸ்போர்ட்டையும் பெற்ற அந்த இளைஞரின் எண்ணம் மாறத் தொடங்கியது. இனிமேல் பிரிட்டனில் வாழ இந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணின் தயவு தேவையில்லை என நினைத்த அவர், தனது பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்திப் பாகிஸ்தானில் ஒரு பெண் மருத்துவரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காகப் பாகிஸ்தான் திரும்பிய அவரிடம், “கஷ்ட காலத்தில் உனக்குப் பணம் செலவு செய்து, மதமும் மாறித் துணை நின்ற அந்தப் பெண்ணை விட்டுவிடாதே” என அவரது நெருங்கிய நண்பர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், “நான் டாக்டராக வேண்டும் என நினைத்தேன், முடியவில்லை; இப்போது ஒரு டாக்டரைத் திருமணம் செய்துகொண்டு இந்த வெள்ளையினப் பெண்ணை விவாகரத்து செய்யப் போகிறேன்” என அவர் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நிச்சயிக்கப்பட்ட பெண் மருத்துவருடன் இவருக்குத் திருமணம் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே இருந்த நிலையில், திருமணத்திற்கான பொருட்களை வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த இளைஞர் எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தன்னை நம்பி மதமும் மாறி, வாழ்க்கையையே அர்ப்பணித்த பெண்ணுக்குத் துரோகம் செய்ய நினைத்த அந்த இளைஞருக்கு இது ‘கர்மா’ கொடுத்த தண்டனையா அல்லது தற்செயலான விபத்தா என அவரது நண்பர் பகிர்ந்துள்ள இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
