அடக்கொடுமையே.. விவசாயிக்குப் பயந்து சிதறி ஓடிய சிறுவர்கள்.. ட்ரோன் கேமராவில் சிக்கிய அந்த ஒரு காட்சி.. குளத்திற்குள் காத்திருந்த பேரதிர்ச்சி.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே.. விவசாயிக்குப் பயந்து சிதறி ஓடிய சிறுவர்கள்.. ட்ரோன் கேமராவில் சிக்கிய அந்த ஒரு காட்சி.. குளத்திற்குள் காத்திருந்த பேரதிர்ச்சி.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், மாயமான இரண்டு மதரஸா மாணவர்களில் ஒருவரது சடலம் குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவான் பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் பயின்று வந்த ஐந்து மாணவர்கள், நன்கொடை வசூலிப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். செல்லும் வழியில் அங்கிருந்த கரும்புத் தோட்டம் ஒன்றில் கரும்பு ஒடிப்பதற்காக அந்தச் சிறுவர்கள் நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, தோட்டத்து விவசாயி வருவதைக் கண்ட சிறுவர்கள் பயந்து போய் ஆளுக்கொரு திசையில் சிதறி ஓடியுள்ளனர்; இதில் மூன்று சிறுவர்கள் பத்திரமாக மதரஸாவிற்குத் திரும்பிய நிலையில், இரண்டு சிறுவர்கள் மட்டும் மாயமாகினர்.

Advertisement

இதையடுத்து, காணாமல் போன சிறுவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, ட்ரோன் கேமரா உதவியுடன் அருகிலிருந்த குளத்தில் 14 வயதான முகமது ஜைத் சத்தி உமர் என்ற மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. மாயமான மற்றொரு மாணவனான அஷ்ரப் அலி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவரைத் தேடும் பணியும், இச்சம்பவம் குறித்த முழுமையான விசாரணையும் காவல்துறையினரால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in