“என்ன ஒரு மாஸ் கம்பேக்..” கல்யாண நாளில் கைவிட்ட மாப்பிள்ளை.. அதே மேடையில் 4 வருஷம் கழிச்சு கெத்தாக காதலரை கரம்பிடித்த பெண்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்ன ஒரு மாஸ் கம்பேக்..” கல்யாண நாளில் கைவிட்ட மாப்பிள்ளை.. அதே மேடையில் 4 வருஷம் கழிச்சு கெத்தாக காதலரை கரம்பிடித்த பெண்..!!

Published

on

பிரித்தானியாவின் வேல்ஸைச் சேர்ந்த காப்பீட்டுத் துறை மேலாளரான 30 வயது கேலி ஸ்டெட்டிற்கு, 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் வராததால் அவர் மிகுந்த மனவேதனைக்குள்ளானார். 12,000 பவுண்டுகள் செலவில் திட்டமிடப்பட்டிருந்த அந்த நிகழ்வை ரத்து செய்வதற்குப் பதிலாக, கேலி அந்த நாளை தனியாகவே முன்னெடுத்துச் சென்று, திருமண மண்டபத்தில் நடந்து சென்று, புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துத் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார்.

தனது வழக்கமான வாழ்க்கையைத் தொடர்ந்த கேலி, 2024-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக கால நண்பரான 31 வயது ரிச்சர்ட் பெரோட்டைச் சந்தித்து இருவரும் காதலிக்கத் தொடங்கினர். கடந்த நவம்பர் 13ஆம் திகதி, Gower Peninsula-வில் உள்ள Fairyhill-யில் 156 விருந்தினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

Advertisement

திருமணம் குறித்துப் பேசிய கேலி, கடந்த முறை தன்னால் திருமண மண்டபத்திற்குள் நுழைய முடியாமல் போனதை நினைக்கும்போது இப்போது உற்சாகமும் ஒருவித பதற்றமும் ஏற்படுவதாகவும், ஆனால் ரிச்சர்ட் முற்றிலும் மாறுபட்டவர் என்றும் கூறியுள்ளார். ரிச்சர்ட்டையும் அவரது குடும்பத்தினரையும் முழுமையாக நம்புவதாகவும், அவருடன் இருக்கும்போது இயல்பாகவும் நேர்மையாகவும் இருக்க முடிகிறது என்றும், இருவருக்கும் இடையே எந்த அந்தஸ்து வேறுபாடும் இன்றி முழுமையான வெளிப்படைத்தன்மை மட்டுமே உள்ளது என்றும் அவர் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in