FLASH: சிக்கலில் தவெக எம்.எல்.ஏ. மற்றும் துணை சபாநாயகர்… ஆளுநரிடம் நேரில் சென்று உதயநிதி கொடுத்த அதிர்ச்சிப் புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: சிக்கலில் தவெக எம்.எல்.ஏ. மற்றும் துணை சபாநாயகர்… ஆளுநரிடம் நேரில் சென்று உதயநிதி கொடுத்த அதிர்ச்சிப் புகார்..!!

Published

on

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்த நிலையில், இன்று ஆளுநரைச் சந்தித்து அவர் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புகாரளிக்க வந்தவரைத் தாக்கியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உதயநிதி ஸ்டாலின் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in