பெற்றோர்கள் செம ஹேப்பி..! 6, 9-ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயமில்லை – சுப்ரீம் கோர்ட் அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெற்றோர்கள் செம ஹேப்பி..! 6, 9-ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயமில்லை – சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

Published

on

சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் கட்டாய மும்மொழித் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம், பள்ளிகளில் புதிதாகக் கட்டாயப்படுத்தப்பட இருந்த மும்மொழி நடைமுறைக்குத் தற்போது தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இரண்டு மொழிகள் அல்லது மூன்று மொழிகளைத் தேர்வு செய்து படித்து வரும் மாணவர்கள், எவ்வித மாற்றமுமின்றி அதே நடைமுறையிலேயே தொடர்ந்து தங்களது கல்வியைத் தொடர அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களின் தற்போதைய மொழிப் பாடத் தேர்வுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement

மேலும், எந்தவொரு மாணவரையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மொழிப் பாடங்களைத்தான் படிக்க வேண்டும் எனப் பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மாணவர்களின் மொழித் தேர்வு உரிமையைப் பாதுகாக்கும் வகையிலான இந்த உத்தரவு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in