“தந்தைக்குத் தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது” – 29 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தந்தைக்குத் தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது” – 29 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!!

Published

on

தந்தைக்குத் தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது என உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 8-ன் கீழ் பாகப்பிரிவினை மூலம் தந்தைக்குக் கிடைக்கும் சொத்து, அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும் என நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசி மற்றும் சுனிதா அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

தந்தை உயிருடன் இருக்கும்போது, அந்தச் சொத்தில் மகன் தனது பிறப்புரிமை அடிப்படையில் பங்கு கோர முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 1997-ஆம் ஆண்டு தொடரப்பட்ட 29 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, தாத்தா சொத்தில் பங்கு கேட்டு பேரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisement

இதன் மூலம், வாரிசுரிமை மற்றும் பாகப்பிரிவினை வழியாகத் தனக்குக் கிடைத்த சொத்தை விற்கவோ, தானமாக வழங்கவோ அல்லது வேறு யாருக்கும் எழுதி வைக்கவோ தந்தைக்கு முழுமையான சட்ட உரிமை உண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in