LATEST NEWS
நவம்பர் 14-க்கு பதில் நவம்பர் 13… அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அட்வான்ஸ் சர்ப்ரைஸ்..! பள்ளிக்கல்வித் துறை போட்ட திடீர் உத்தரவு..!!
அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தினத்தை வரும் 13-ம் தேதியே கொண்டாட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாகக் கொண்டாடப்படும் குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி சனிக்கிழமை என்பதால், அன்று பள்ளிகளுக்கு விடுமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், நவம்பர் 13-ம் தேதியே (வெள்ளிக்கிழமை) பள்ளிகளில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும்படியும், அன்றைய தினமே மாணவர்களுக்கு கேக் வழங்கி சிறப்பிக்கவும் உத்தரவிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாகச் செய்யப்பட்டுள்ளன.
