LATEST NEWS
“ஐயோ சாமி… இது சாப்பாடா இல்ல இரும்புக்கடையா..?” பருப்பு உணவில் இருந்த ‘அந்த’ பொருள்.. அலறிய பயணி.. IRCTC உணவில் நடந்த பகீர் சம்பவம்..!!
இந்திய ரெயில்வேயில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாகியுள்ளது. ரெயில் பயணத்தின் போது ஐ.ஆர்.சி.டி.சி வழங்கிய உணவில் இரும்புத் துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் துரிதமாகச் செயல்பட்ட ரெயில்வே துறை, சம்மந்தப்பட்ட உணவு வழங்குநருக்குக் கடுமையான அபராதம் விதித்துள்ளதுடன், பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
கவுகாத்தியில் இருந்து ஓகா நோக்கிச் சென்று கொண்டிருந்த துவாரகா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமித் அவஸ்தி என்ற பயணி பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பருப்பு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அதில் சிறிய வெள்ளி நிற இரும்புத் துண்டு ஒன்று இருப்பதை அவர் கண்டுள்ளார். பாதியைச் சாப்பிட்டு முடித்த பின்னரே இந்த விஷயம் தெரியவந்துள்ளதுடன், தான் அறியாமல் அந்த இரும்புத் துகள்களை விழுங்கியிருக்கலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காணொளியாகப் பகிர்ந்து தனது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.
பயணியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக விழிப்படைந்த இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), இந்தச் சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. ரெயிலில் உணவு மற்றும் கேடரிங் சேவைகளை வழங்கி வரும் தொடர்புடைய நிறுவனத்திற்குப் பெரிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்ட சம்மந்தப்பட்ட உணவு பரிமாறும் பணியாளர்கள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சுகாதாரக் குறைபாடுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
