அடச்சீ..! இந்த மாவுல தான் சப்பாத்தி போடுறாங்களா..? ரயிலில் எலி செய்யும் அட்டகாசம்… வீடியோ வைரலானதும் ரெயில்வே கொடுத்த அதிரடி விளக்கம்.. பயணிகள் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடச்சீ..! இந்த மாவுல தான் சப்பாத்தி போடுறாங்களா..? ரயிலில் எலி செய்யும் அட்டகாசம்… வீடியோ வைரலானதும் ரெயில்வே கொடுத்த அதிரடி விளக்கம்.. பயணிகள் அதிர்ச்சி..!!

Published

on

மகாராஷ்டிராவின் லோக்மான்ய திலக் முனையத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் ரயில் நிலையம் வரை செல்லும் ‘உத்யோக் நகரி எக்ஸ்பிரஸ்’ ரயிலின் பேன்ட்ரி காரில் பிசைந்து வைக்கப்பட்டிருந்த ரொட்டி மாவை எலி ஒன்று சாப்பிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரயிலில் விட்டுச்சென்ற தனது பொருட்களை எடுக்க பயணி ஒருவர் மீண்டும் வந்தபோது, இக்காட்சியைக் கண்டு தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவை சர்பராஸ் ஜெயின் என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பேன்ட்ரி ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த ரயில்வே நிர்வாகம், மும்பை கோட்ட ரயில்வே மேலாளரை டேக் செய்து, முறையான விசாரணைக்காக இச்சம்பவம் நடந்த தேதி மற்றும் நேர விவரங்களைக் கேட்டுள்ளது.

Advertisement

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், கலப்படத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கும் மகாராஷ்டிர ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே போன்ற கண்டிப்பான அதிகாரிகள் ரயில்வே உணவுத் துறைக்கும் தேவை என்று பயணிகள் மற்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in