LATEST NEWS
“இது என்ன திட்டம்…? யாருக்கு என்ன பிரயோஜனம்?..” விஜய் கொண்டு வந்த திட்டத்தை பொளந்து கட்டிய போஸ் வெங்கட்..!!
தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 2026-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த தகுதியான குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. மேலும், மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு மற்றும் தாய்-சேய் நலப் பிரிவில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் குறித்து நலம் விசாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடங்கப்பட்ட “தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” மக்களை வெறுமனே ஏமாற்றும் திட்டம் என நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். அரசால் அறிவிக்கப்படும் ஒரு திட்டம் என்பது ஒரு தலைமுறைக்கே அவசியமானதாக மற்றும் அவசியமுள்ளதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், ‘நான் முதல்வன்’, ‘இல்லம் தேடி கல்வி’, ‘அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்’ போன்ற பல திட்டங்களை உதாரணங்களாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து தனது பதிவில், “தாய்மாமன் தங்க மோதிர திட்டம்” இது என்ன திட்டம்?.. யாருக்கு பிரயோஜனம்?.. இது வெறும் கவர்ச்சி திட்டம்.. மக்களை வெறுமனே ஏமாற்றும் திட்டம்.. மக்கள் விழித்துக்கொள்வார்கள் என நம்புகிறேன் என்று இயக்குநர் போஸ் வெங்கட் மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
