LATEST NEWS
“20 வருஷமா வராத மகன்கள்..!” தந்தை எழுதிய அந்த ‘ஒற்றை’ உயில்.. உறைந்துபோன வாரிசுகள்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியாவின் பீம்பூர் கிராமத்தில், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதியரின் 20 வருட மௌனத்திற்குப் பிறகு வெளிவந்துள்ள மே 13ஆம் தேதியிட்ட ஒரு உயில், தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டில், சந்தோஷ் மற்றும் மனோஜ் ஆகிய இரு மகன்களும் தங்களது வயதான பெற்றோரைப் பாராமரிக்காமல் நிரந்தரமாகத் தனியாக விட்டுவிட்டுச் சென்றனர். பெற்ற மகன்களே தங்களைக் கைவிட்ட நிலையிலும், தங்களது கடமைகளிலிருந்து தவறாத இரு மகள்களான சாதனா மற்றும் ரீட்டா சிங் ஆகியோர், தங்களது வயதான பெற்றோரைத் தங்களோடு அழைத்துச் சென்று அன்போடு அரவணைத்துப் பராமரித்து வந்துள்ளனர்.
மகள்களின் இந்தத் தியாகத்தையும் பாசத்தையும் போற்றும் வகையில், அந்த வயதான தந்தை தனது ஒட்டுமொத்தச் சொத்துக்களையும் தங்களைக் கடைசி வரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்ட இரு மகள்களுக்கு மட்டுமே சேரும்படி மே 13ஆம் தேதியிட்டு ஒரு புதிய உயிலை எழுதியுள்ளார். சொத்துக்காக மட்டுமே ஆசைப்பட்டு, பெற்றோரைத் தவிக்கவிட்ட மகன்களுக்கு இந்த பீம்பூர் சம்பவம் ஒரு மிகச் சிறந்த பாடமாக அமைந்துள்ளது. தங்களை ஈன்றெடுத்த பெற்றோரை முதியோர்களாகக் கைவிடும் இந்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு மத்தியில், மகள்களின் இந்த அர்ப்பணிப்பும், தந்தையின் இந்த அதிரடி முடிவும் சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
