எப்படியெல்லாம் யோசிக்குறாங்க..? “அடிபம்பை அடிச்சா தண்ணி வரும்னு பார்த்தா”.. உள்ளே இருந்து வந்ததைப் பாருங்க… போலீசே ஷாக் ஆன சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

எப்படியெல்லாம் யோசிக்குறாங்க..? “அடிபம்பை அடிச்சா தண்ணி வரும்னு பார்த்தா”.. உள்ளே இருந்து வந்ததைப் பாருங்க… போலீசே ஷாக் ஆன சம்பவம்.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் அடிபம்பிலிருந்து தண்ணீருக்குப் பதிலாகக் கள்ளச்சாராயம் வந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சக்ரார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மதுபானக் கடத்தல்காரர்கள் நிலத்தடியில் ரகசியமாகத் தொட்டி அமைத்து, அதன் மேல் சாதாரண அடிபம்பு ஒன்றைப் பொருத்தியுள்ளனர். அந்த அடிபம்பை அடித்தபோது தண்ணீருக்குப் பதிலாகக் கள்ளச்சாராயம் வெளியேறியதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 1,000 லிட்டர் மூலப்பொருட்களும் அங்கேயே அழிக்கப்பட்டன.

Advertisement

இந்தச் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் பதுக்கல் தொடர்பாகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து கலால் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in