“நீங்க அவங்களுக்கு 8-வது கணவர்…” திருமண நாள் கொண்டாடிய கையோடு 15 லட்சம் நகைகளுடன் ஒடிய ‘கல்யாண ராணி’.. போலீஸ் விசாரணையில் கணவருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீங்க அவங்களுக்கு 8-வது கணவர்…” திருமண நாள் கொண்டாடிய கையோடு 15 லட்சம் நகைகளுடன் ஒடிய ‘கல்யாண ராணி’.. போலீஸ் விசாரணையில் கணவருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், திருமண மோசடியில் ஈடுபட்ட ‘கல்யாண ராணி’ ஒருவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த விகாஸ் விஸ்வகர்மா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரகதி விஸ்வகர்மா என்ற பெண்ணுக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சுமார் ஒரு வருடம் வரை தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்த பிரகதி, கடந்த 2026-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே, புகுந்த வீட்டிலிருந்த சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு மாயமானார்.

மனைவி நகை மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றதால் அதிர்ச்சியடைந்த விகாஸ், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் வெளியான தகவல்கள் காவல்துறையினரையும், கணவர் விகாஸையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. பிரகதி ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு முதல் இதே பாணியில் 7 முதல் 8 பேரைத் திருமணம் செய்து, அவர்களிடம் இருந்தும் பணம் மற்றும் நகைகளைச் சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

வெளித்தோற்றத்தை மட்டுமே நம்பித் திருமணம் செய்து கொண்ட விகாஸ், பிரகதியின் எட்டாவது கணவர் என்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. காதல் மற்றும் திருமணம் என்ற பெயரில் பல ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையடித்த பிரகதியின் இந்தத் தொடர் மோசடி கான்பூர் பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தற்போது ஏமாற்றப்பட்ட எட்டாவது கணவரான விகாஸ், தனது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் நிலையில், தலைமறைவான பிரகதியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in