CRIME
வீட்டருகே காத்திருந்த கொடூர கும்பல்.. வேலைக்குச் செல்ல வெளியே வந்த 33 வயது இளைஞர்.. அடுத்த நொடியே நடந்த பயங்கர சம்பவம்.. அதிர்ச்சி பின்னணி..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில் வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த 33 வயது இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் ஈட்டி மற்றும் கோடரியால் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிர்சாபூர் மாவட்டத்தின் கோட்வாலி தேஹாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விர்ஷாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அதுல் துபே. இவர் வழக்கம் போல் தனது வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்து சற்று தொலைவில் ஏற்கனவே மறைந்திருந்து காத்திருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், அதுல் துபேவைத் திடீரென வழிமறித்துள்ளது. பின்னர், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஈட்டி, கோடரி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தடிகளால் அதுல் துபேவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த அதுல் துபே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் வீட்டருகே நடந்த இந்தப் பயங்கரப் படுகொலைச் சம்பவம் விர்ஷாபூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
