“அப்பா அம்மாவைக் கொன்னுட்டாரு” போலீசுக்கு போன் செய்து கதறிய 12 வயதுச் சிறுவன்… ஒரு கப் தேநீருக்காகப் பறிபோன உயிர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்பா அம்மாவைக் கொன்னுட்டாரு” போலீசுக்கு போன் செய்து கதறிய 12 வயதுச் சிறுவன்… ஒரு கப் தேநீருக்காகப் பறிபோன உயிர்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், தேநீர் போட்டுத் தராததால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கௌடியா பஜார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது.

14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான மனோஜ் குமார் சுக்லா (40) மற்றும் சுமன் (35) தம்பதியினருக்கு இடையே வெள்ளிக்கிழமை இரவு தேநீர் போடுவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ் குமார், தனது 12 வயது மகனின் கண்முன்னே மனைவி சுமனைக் கோடரியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

Advertisement

சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த 12 வயதுச் சிறுவன், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்து, “அப்பா அம்மாவைக் கொன்றுவிட்டார்; அவரது உடல் வீட்டிற்குள் கிடக்கிறது” என்று கதறியுள்ளான். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், கட்டிலில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த சுமனின் உடலைக் கைப்பற்றினர். மேலும், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான மனோஜ் குமாரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in