“அரசாங்கம் உதவி செய்தால் நானே வளர்ப்பேன்.. இல்லனா.. ” பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வைத்து தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் அவலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அரசாங்கம் உதவி செய்தால் நானே வளர்ப்பேன்.. இல்லனா.. ” பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வைத்து தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் அவலம்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை காரணமாகத் தனது ஐந்து பிள்ளைகளுக்கு உணவளிக்கவே போராடி வரும் தாய் ஒருவர், பிறந்து 25 நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தையைத் தத்துக்கொடுக்கச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வரும் அந்தப் பெண், தனது பிள்ளைகளின் பசியைப் போக்க வழிதெரியாமல் இத்தகைய வேதனையான முடிவை எடுத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் கணவர் தினக்கூலி வேலை செய்து வரும் நிலையில், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு ஐந்து குழந்தைகளையும் வளர்த்துக் குடும்பத்தை நடத்துவது அவருக்கு மிகவும் கடினமாக உள்ளது. வீட்டில் உணவுக்கே வழியில்லாத சூழலில், புதிதாகப் பிறந்த 25 நாள் குழந்தையைப் பராமரிக்கவும், அதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும் முடியாமல் அந்தத் தாய் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளார்.

Advertisement

தனது குழந்தையைப் பாதுகாப்பாக வளர்க்கக்கூடிய நல்ல குடும்பத்திடம் ஒப்படைக்க நினைத்துத் தத்துக்கொடுக்க முன்வந்த அந்தத் தாய், “எனக்கு அரசு தரப்பிலிருந்து ஏதேனும் நிதியுதவியோ அல்லது வாழ்வாதார உதவியோ கிடைத்தால், என் குழந்தையை நானே வைத்து வளர்ப்பேன்” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். வறுமையின் காரணமாகப் பெற்ற குழந்தையைப் பிரியத் துணிந்த இந்தத் தாயின் நிலை, அப்பகுதி மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in