CRIME
நொடியில் நடந்த கோரம்.. அதிவேக ரயிலில் சிக்கி தீப்பிடித்து எரிந்த மினிபஸ்… 264 பயணிகளின் நிலை என்ன..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சிமலுங்கன் பகுதியில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. சியாந்தர்–மேடான் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ‘சியாந்தர் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் குறுக்கே மினிபஸ் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த ரயில் மினிபஸ் மீது மோதி, அதனை சிறிது தூரத்திற்கு இழுத்துச் சென்றதில், ரயில் இன்ஜின் மற்றும் மினிபஸ் ஆகிய இரண்டிலும் திடீரென பயங்கர தீப்பிடித்தது.
இந்தத் தீ விபத்தில் மினிபஸ் ஓட்டுநர் உள்ளே சிக்கிக் கொண்டதால் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ரயிலில் இருந்த இரண்டு லோகோ பைலட்டுகள் மற்றும் ஒரு ரயில்வே ஊழியர் ஆகியோர் காயமடைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் ரயிலில் 264 பயணிகள் பயணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
