“மசாஜ் செய்வதாகக் கூறி ஆடைக்குள் கைவிட்ட ஊழியர்..” பிரபல சலூனுக்குச் சென்ற 31 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. அதிர்ச்சி பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மசாஜ் செய்வதாகக் கூறி ஆடைக்குள் கைவிட்ட ஊழியர்..” பிரபல சலூனுக்குச் சென்ற 31 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. அதிர்ச்சி பின்னணி..!!

Published

on

பெங்களூரு ராஜாஜிநகர் தொழிற்பேட்டைக்கு அருகே உள்ள, நடிகை அஞ்சலி அரோராவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சலூன் ஒன்றிற்கு வழக்கமான ‘ஹேர் ஸ்பா’ சிகிச்சைக்காகச் சென்ற 31 வயதுப் பெண்ணிடம், அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அந்தப் பெண், கடந்த நவம்பர் 12-ஆம் தேதி மாலை சலூனுக்குச் சென்றிருந்தபோது, அர்சலங்காழி (24) என்ற ஊழியர் மசாஜ் செய்வதாகக் கூறித் தனது ஆடைக்குள் கைகளை நுழைத்துத் தகாத முறையில் தொட்டதாகவும், உள்ளாடையை இழுத்துப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தான் பலமுறை எதிர்ப்பு தெரிவித்துத் தலைமுடியைக் கழுவுவதோடு நிறுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்திய பிறகே அந்த ஊழியர் நிறுத்தியதாகவும், அதன்பின் உடனடியாகக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 13 பாதிக்கப்பட்ட பெண் பசவேஸ்வரநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 75-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 24 வயதான ஊழியர் அர்சலங்காழியைப் போலீசார் கைது செய்த நிலையில், பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது, தான் அப்பெண்ணின் தோள்களை மட்டுமே மசாஜ் செய்ததாகவும், எந்தவித பாலியல் அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் அந்த ஊழியர் தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in