CRIME
“என் அம்மாவை வேற்றுக்கிரகவாசிகள் கடத்திச் சென்றுவிட்டனர்..!” போலீசிடம் நாடகமாடிய மகன்… வீட்டின் பின்புறத் தோட்டத்தில் காத்திருந்த பகீர் காட்சி..!!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஹோமர் நகரில், 65 வயதான தனது தாய் மேரி கேம்ப்பெலைக் கொன்று எரித்துவிட்டு, அவரை “வேற்றுக்கிரகவாசிகள் கடத்திச் சென்றுவிட்டதாக” காவல்துறையிடம் நாடகமாடிய மகன் ஜேசன் கிறிஸ்டோபர் கேம்ப்பெலுக்கு (35) நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த ஜனவரி 6-ஆம் தேதி, மேரி தனது கைப்பை, கார், அடையாள அட்டை மற்றும் செல்போன் உள்ளிட்ட எந்தப் பொருட்களையும் எடுத்துச் செல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். இது குறித்துச் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில், போலீசார் விசாரிக்க வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்ட ஜேசன், “வேற்றுக்கிரகவாசி போன்ற மர்ம நபர் தனது தாயைக் கடத்திச் சென்றுவிட்டதாக” விசித்திரமான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்த விசித்திரப் புகாரால் சந்தேகமடைந்த காவல்துறையினர், ஜேசனின் வீட்டிற்கு விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் பின்புறத் தோட்டத்தில் புகைந்து கொண்டிருந்த நெருப்பு மற்றும் எரிந்த மெத்தைக்கு அருகே மேரியின் கருகிய உடல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன; பிரேதப் பரிசோதனையிலும் அது மேரியுடைய உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. தாயைக் கொலை செய்ததற்கான காரணத்தை ஜேசன் இதுவரை தெரிவிக்காத நிலையில், பேங்க்ஸ் கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்ற 5 நாள் விசாரணையின் முடிவில், மரணத்தை மறைத்த குற்றத்திற்காக ஜேசன் கேம்ப்பெலுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆல்பர்ட் காலியர் தீர்ப்பளித்துள்ளார்.
