CRIME
அடக்கடவுளே.. ஆசையாகப் புதிய சேலை அணிந்து அரசு விழாவிற்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. விழா மேடையிலேயே பறிபோன உயிர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் சிద్திப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ‘இந்திரம்மா பரோசா’ மற்றும் ‘இந்திரம்மா சேலைகள்’ வழங்கும் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த கொம்மு சரவ்வா என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திரம்மா சேலையை அணிந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் அரசு விழாவிற்கு வந்திருந்த அவர், எதிர்பாராத விதமாக அங்கு உயிரிழந்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் கூட்டத்தில் பங்கேற்ற மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர், உயிரிழந்த கொம்மு சரவ்வாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், சரவ்வாவின் குடும்பத்திற்குத் துணையாக நிற்கும் வகையில் ரூ.5 லட்சம் நிதியுதவியையும் அமைச்சர் பொன்னம் பிரபாகர் வழங்கினார்.
