காலையிலேயே அதிர்ச்சி.. வயலை உழுவதற்குச் சென்ற 25 வயது இளைஞர்.. பின்தொடர்ந்து வந்த மர்ம நபரின் வெறிச்செயல்.. உறைந்துபோன கிராமம்..!! – cinefeeds
Connect with us

CRIME

காலையிலேயே அதிர்ச்சி.. வயலை உழுவதற்குச் சென்ற 25 வயது இளைஞர்.. பின்தொடர்ந்து வந்த மர்ம நபரின் வெறிச்செயல்.. உறைந்துபோன கிராமம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் துங்கதுர்த்தி மண்டலத்திற்குட்பட்ட வேம்பட்டி கிராமத்தில், விவசாய நிலத்தை உழுவதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நேரத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த சமகுரி மகேஷ் (25) என்ற இளைஞர் வழக்கம் போல் தனது வயலுக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென மகேஷை வழிமறித்து கத்தியால் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தால் வேம்பட்டி கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in