CRIME
உச்சக்கட்ட பயங்கரம்.. தலை, முண்டம் வேறாகக் கிடந்த இளம்பெண்.. அருகே எரிக்கப்பட்ட துணிகள்.. கிராமத்துக் காட்டுக்குள் நடந்த மர்மம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள மஜ்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிர்வார் கிராமத்தின் காட்டுப் பகுதியில், இளம்பெண் ஒருவர் தலையைத் துண்டித்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டுப் பகுதியில் பெண்ணின் முண்டம் கிடந்த நிலையில், அதிலிருந்து சற்றுத் தொலைவில் துண்டிக்கப்பட்ட அவரது தலை வீசப்பட்டிருந்தது. மேலும், சடலத்திற்கு அருகே எரிக்கப்பட்ட நிலையில் சில துணிகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு முதல் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் பின்னர் தலையைத் துண்டித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மஜ்கவான் காவல்துறையினர், உயிரிழந்த பெண் யார் என்பதை அடையாளம் காணும் பணியிலும், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
