“ஏய் ஒரு டீ போடு..” மறுத்த மனைவியை போதையில் கணவன் செய்த கொடூர காரியம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஏய் ஒரு டீ போடு..” மறுத்த மனைவியை போதையில் கணவன் செய்த கொடூர காரியம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில், டீ போட்டுத் தர மறுத்த மனைவியைக் கணவனே கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா பகுதியைச் சேர்ந்த மனோஜ் சுக்லா என்பவர், இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் தனது மனைவி சுமன் சுக்லாவிடம் தனக்கு டீ போட்டுத் தருமாறு அவர் கேட்டுள்ளார்.

கணவர் மதுபோதையில் இருந்ததாலும், நள்ளிரவு நேரமானதாலும் மனைவி சுமன் சுக்லா டீ போட்டுத் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த மனோஜ் சுக்லா கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

Advertisement

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற மனோஜ் சுக்லா, வீட்டிலிருந்த கோடரியை (Axe) எடுத்துத் தனது மனைவி சுமன் சுக்லாவைச் சரமாரியாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மனைவியைக் கொலை செய்த பிறகு அங்கிருந்து தப்பியோடிய மனோஜ் சுக்லாவை, வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in