CRIME
“50 லட்சம் சொத்துக்காக இப்படியொரு கொடூரமா..?” முதல் நாள் தந்தை, மறுநாள் தங்கை என அடுத்தடுத்து அரங்கேற்றிய இரட்டைப் படுகொலை.. மகனின் வெறிச்செயல்.. இந்தூரையே உறைய வைத்த கொடூரம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 50 லட்சம் ரூபாய் சொத்துத் தகராறு காரணமாக, மகனே தனது தந்தை மற்றும் தங்கையைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த 26 வயதான ஹர்ஷ் யாதவ் என்பவர், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து விவகாரம் தொடர்பாகத் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். பணத்தின் மீது கொண்ட பேராசையால் அரக்கனாக மாறிய அவர், தனது தந்தை ராஜு யாதவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, ஹர்ஷ் யாதவ் தனது சிறுவயது கூட்டாளி ஒருவரின் உதவியுடன் சேர்ந்து, முதலில் தனது தந்தை ராஜு யாதவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தந்தையைக் கொலை செய்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே, மறுநாள் தனது தங்கை ஹர்ஷிதாவையும் கழுத்தை நெரித்து ஹர்ஷ் யாதவ் படுகொலை செய்துள்ளார். சொத்து முழுவதையும் தானே அபகரிக்கும் நோக்கத்தில் அடுத்தடுத்து இருவரையும் அவர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் அடுத்தடுத்த நாட்களில் கொலை செய்யப்பட்ட இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் இந்தூர் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷ் யாதவ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுவன் ஆகியோர் மீது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
