CRIME
“அடிப்பாவி.. இன்சூரன்ஸ் பணத்திற்காக இப்படியா..?” 20 ஆண்டுகால கணவனுக்கு கள்ளக்காதலனுடன் பயங்கர ஸ்கெட்ச் போட்ட மனைவி.. 60 சிசிடிவி கேமராக்களால் அம்பலமான உண்மை..!!
மகளின் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகவும், கணவரின் பெயரில் இருந்த பல லட்சம் ரூபாய் காப்பீட்டுப் பணத்தை அபகரிப்பதற்காகவும், 20 ஆண்டுகால வாழ்க்கைத் துணையைப் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான ரேகா சைனி என்பவருக்கும், 40 வயதான சதீஷ் சைனி என்பவருக்கும் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். வரும் பிப்ரவரி மாதம் இவர்களது மூத்த மகளுக்குத் திருமணம் நடைபெறவிருந்த சூழலில், ரேகா சைனிக்கு ராஜேஷ் என்ற ராஜு மிஸ்திரி என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
கணவர் சதீஷ் சைனி தனது பெயரில் பல எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை எடுத்திருந்ததை அறிந்த ரேகா, கணவரைத் தீர்த்துக்கட்டிவிட்டு அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் புதிய வாழ்க்கை தொடங்கத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, இயற்கை மரணம் அல்லது கொலையாக இருந்தால் காப்பீட்டுப் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்தக் கொலையை ஒரு சாலை விபத்து போல் ஜோடிக்க இருவரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, சதீஷை சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி, அவரது சடலத்தை 40 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு சென்று வீசி, விபத்தில் உயிரிழந்தது போல் நாடகமாடியுள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 60 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது. இதையடுத்து, காப்பீட்டுப் பணத்திற்காகவும் கள்ளக்காதலுக்காகவும் கணவரைக் கொன்று விபத்து நாடகமாடிய ரேகா சைனி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜேஷ் ஆகியோரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
