அடக்கொடுமையே… தாய் சொன்ன ஒற்றை வார்த்தை… 2 குழந்தைகளைத் தவிக்கவிட்டு 25 வயது இளம்பெண் செய்த விபரீத காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே… தாய் சொன்ன ஒற்றை வார்த்தை… 2 குழந்தைகளைத் தவிக்கவிட்டு 25 வயது இளம்பெண் செய்த விபரீத காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

ஹயாத்நகர் பகுதியில், எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதைத் தாய் கண்டித்ததால் மனமுடைந்த 25 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தி மண்டலத்திற்கு உட்பட்ட எல்லம்மா ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிதேவி (25). இவருக்கும் நல்கொண்டா மாவட்டம் டி.பி. கௌராரம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமண் என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில்தான் லட்சுமண் தனது மனைவிக்குத் தவணை முறையில் புதிய போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பிறகு லட்சுமிதேவி எப்போதும் செல்போனிலேயே மூழ்கியிருந்ததால், செல்போனை ஓரமாக வைத்துவிட்டு வீட்டு வேலைகளைக் கவனிக்குமாறு அவரது தாய் அறிவுரை கூறித் திட்டியுள்ளார். தாயின் இந்த வார்த்தைகளால் கடும் மனவேதனை அடைந்த லட்சுமிதேவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார்; இரண்டு குழந்தைகளைத் தவிக்கவிட்டு இளம்பெண் எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in