CRIME
“அடப்பாவிகளா.. காதலிக்குப் பிறந்தநாள் பரிசாக ரூ.10,000 போன் ஆர்டர் செய்த இளைஞர்..” டெலிவரி பாக்ஸைத் திறந்ததும் காத்திருந்த பயங்கர ட்விஸ்ட்.. ஆன்லைன் ஷாப்பிங்கில் நடந்த பகீர் சம்பவம்..!!
இளைஞர் ஒருவர் தனது காதலியின் பிறந்தநாளுக்குப் பரிசளிப்பதற்காக, ஆன்லைனில் ரூ.10,000 மதிப்புள்ள ‘POCO M6 5G’ ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருந்தார். நேற்று மதியம் டெலிவரி ஊழியர் பார்சலைக் கொண்டு வந்தபோது, ஆன்லைன் மோசடிகளைத் தவிர்ப்பதற்காகத் தன் கண்முன்னாலேயே பெட்டியைத் திறந்து காட்டுமாறு அந்த இளைஞர் கூறியுள்ளார். அதன்படி டெலிவரி ஊழியர் பார்சலைத் திறந்ததும், உள்ளே ஸ்மார்ட்போனுக்குப் பதிலாகக் கற்கள் இருப்பதைக் கண்டு அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், அந்த ஆர்டரை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை விடுத்தார்; அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பணமும் உடனடியாகத் திரும்பக் கிடைத்தது.
இத்தகைய ஆன்லைன் மோசடிகள் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றன. பொருட்கள் முறையாக பேக் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களிடம் சென்றடைவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாலும், இடைத்தரகர்களாகச் செயல்படும் மோசடிக்காரர்களே இது போன்ற திருட்டுச் சம்பவங்களுக்குக் காரணமாகின்றனர். எனவே, ஆன்லைனில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் பொருட்களை ஆர்டர் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து, டெலிவரி பெறும்போது ‘Open Box Delivery’ முறையைப் பயன்படுத்தி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
