CRIME
சோப்புக்குள் காத்திருந்த பயங்கரம்..! சிறுவன் முகத்தில் வழிந்த ரத்தம்… பிரபல நிறுவனத்திற்குக் காத்திருந்த அதிர்ச்சி வைத்தியம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், குளிக்கும் சோப்பிற்குள் மறைந்திருந்த பிளேடு கிழித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட சோப்பு நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்துள்ளது. குவாலியரைச் சேர்ந்த அங்கத் தோமர் வாங்கிய பிரபல நிறுவனத்தின் சோப்பைப் பயன்படுத்திய அவரது மகனின் முகத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சோப்பிற்குள் பிளேடு சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கடைக்காரரிடம் புகார் அளித்து மாற்று சோப்பு வாங்கியபோதும், அதிலும் பிளேடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தனர். விசாரணையின்போது, சோப்பில் வேண்டுமென்றே பிளேடு வைக்கப்பட்டிருக்கலாம் என நிறுவனம் முன்வைத்த வாதத்தை ஆணையம் நிராகரித்தது.
இறுதியில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக சோப்பு நிறுவனம் ₹50,000, வழக்குச் செலவாக ₹2,000, மேலும் கடைக்காரர் மற்றும் விநியோகஸ்தர் தலா ₹2,000 என மொத்தம் ₹56,000 அபராதம் செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
