“அவளுக்கு அந்த பழக்கம் இருந்தது…!ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் நடந்த விபரீதம்! நடிகை ட்விஷாவின் மரணமும்…! தலைமறைவான கணவனின் ரகசியமும்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அவளுக்கு அந்த பழக்கம் இருந்தது…!ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் நடந்த விபரீதம்! நடிகை ட்விஷாவின் மரணமும்…! தலைமறைவான கணவனின் ரகசியமும்…!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான சில மாதங்களிலேயே தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் பேசுபொருளாகியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்தவரான ட்விஷா சர்மா, ‘மிஸ் புனே’ அழகி பட்டம் வென்றதோடு தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் போபாலைச் சேர்ந்த சமர்த் சிங் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம்தான் திருமணம் நடைபெற்றது. இந்தச் சூழலில், கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் ட்விஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். “என் மகள் வரதட்சணைக் கொடுமையால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்” என ட்விஷாவின் பெற்றோர் குற்றம் சாட்டி வரும் வேளையில், இந்த வழக்கில் சினிமாவை மிஞ்சும் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

வழக்கில் முதன்மைக் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் ட்விஷாவின் மாமியாரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங், தன் மீதான பழியை மறைக்க ட்விஷா மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்தார். ட்விஷாவுக்குக் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாகவும், அவர் கர்ப்பமாக இருந்தபோது கூட கஞ்சா உட்கொண்டார் என்றும், அவரது குடும்பத்தினரே அவரை கிளாமர் துறைக்குத் தள்ளிவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்தார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கை, மாமியாரின் இந்த வாதத்தை முற்றிலுமாகப் பொய்யாக்கியுள்ளது. ட்விஷாவின் உடலில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்தவொரு தடயமும் இல்லை என்று போபால் போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.

Advertisement

இருப்பினும், இந்த வழக்கின் புலனாய்வில் போலீஸ் தரப்பில் சில குளறுபடிகள் நடந்துள்ளதாகப் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ட்விஷா தற்கொலைக்கு வற்புறுத்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பெல்ட், பிரேதப் பரிசோதனை மருத்துவரிடம் சரியான நேரத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்ற தவறை போலீஸ் கமிஷனர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்துத் தனியாக விசாரணை நடத்தப்படும் என்றும், தற்போதைக்கு அந்தப் பெல்ட் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டுவிட்டதால் வழக்கில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இரண்டாவது முறை பிரேதப் பரிசோதனை செய்யக் கோரும் பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கை குறித்துப் பேசிய கமிஷனர், அதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் போலீசாருக்கு இல்லை என்றும், அவர்கள் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின்படி இது தற்கொலைதான் என்று போலீசார் கூறினாலும், வரதட்சணைக் கொடுமையே அவரை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. இதையடுத்து, ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் மீது வரதட்சணை மரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விஷா இறந்த நாள் முதலே அவரது கணவர் சமர்த் சிங் தலைமறைவாக இருப்பது அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அழகும் திறமையும் கொண்ட ஒரு இளம் நடிகை, திருமணமான ஐந்தே மாதங்களில் வரதட்சணைக் கொடுமையால் தன் வாழ்வை முடித்துக் கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in