“தந்தை ஆசையாக வாங்கிய புது எலக்ட்ரிக் ஆட்டோ…” சுத்தம் செய்தபோது 12 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“தந்தை ஆசையாக வாங்கிய புது எலக்ட்ரிக் ஆட்டோ…” சுத்தம் செய்தபோது 12 வயது மகளுக்கு நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பெனுபள்ளி மண்டலத்திற்குட்பட்ட பதகராயகுடேம் கிராமத்தில், தந்தை புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாவே அவரது 12 வயது மகளின் உயிரைப் பறித்த சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருகுலப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த பவானி என்ற சிறுமி, தனது தந்தை வீட்டின் வெளியே தினமும் செய்வது போலப் புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாகச் சிறுமி பவானி ஆட்டோவின் ஆக்ஸிலரேட்டரை அழுத்தியதால், ஆட்டோ திடீரென வேகமாக முன்னோக்கிப் பாய்ந்தது.

இதில் நிலைதடுமாறிய சிறுமி பவானி, முன்னோக்கிச் சென்ற ஆட்டோவிற்கும் வீட்டின் தூணுக்கும் இடையே சிக்கிப் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றிப் பவானி பரிதாபமாக உயிரிழந்தார். மிகுந்த பாசத்துடன் வளர்த்த தங்கள் செல்ல மகளை இழந்த பெற்றோரும் குடும்பத்தினரும் கதறி அழுத காட்சி, அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்திலும் கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in