LATEST NEWS
அய்யோ கொடுமையே… தவறுதலாக சுட்ட அண்ணன்… பறிபோன தம்பியின் உயிர்…! காருக்குள் நடந்த கலங்க வைக்கும் சோகம்…!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 24 வயதான முகமது இப்ராஹிம் அகமது, அமெரிக்காவின் லாங் ஐலண்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராகப் படித்து வந்தார். இவர் கடந்த நவம்பர் 14 அன்று தனது மூத்த சகோதரர் முகமது பஷீர் அகமது உடன் நியூ யார்க் நகரில் ஹிக்ஸ்வில்லில் உள்ள 459 சவுத் பிராட்வே அருகே காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அண்ணன் பஷீர் அகமது கையில் இருந்து கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், தம்பி இப்ராஹிம் முகமதுவின் முதுகில் தோட்டா பாய்ந்தது. உடனடியாக இப்ராஹிம் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்; ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அந்தக் கைத்துப்பாக்கி எப்படி காரில் வந்தது அல்லது அது எப்படிச் சுட்டது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காவல்துறை விசாரணையைத் தொடர்ந்து பஷீர் கைது செய்யப்பட்டார்; அவர் மீது 2-ன்ட் டிகிரி தற்செயலான கொலை மற்றும் 2-ன்ட் டிகிரி சட்டவிரோத ஆயுதக் கையிருப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என்று வாதிட்டுள்ள அவர், தனது அடுத்த விசாரணைக்காக தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
