LATEST NEWS
“கோட்” படப்பிடிப்பு…. விமான நிலையத்திலிருந்து பரபரப்பாக புறப்பட்டு சென்ற விஜய்… எந்த நாட்டிற்கு தெரியுமா?..!!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விஜயின் 68-வது படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கின்றார்.

#image_title
மேலும் கையில் இருக்கும் படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார் நடிகர் விஜய். இதனால் இந்த திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கின்றது. விஜய்யின் இளமைப் பருவ கதாபாத்திரத்திற்காக கலிபோர்னியாவில் டீஜின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. டைம் ட்ராவல் அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறி வருகிறார்கள்.

#image_title
அண்மையில் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற நிலையில் அங்கு கேரளா ரசிகர்களை விஜய் சந்தித்தார். இந்நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிகளை எடுப்பதற்காக விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்டு சென்று இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
