LATEST NEWS
கார் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்?… உயிரை பணயம் வைத்து எடுத்த ஸ்டண்ட்…. அதிர்ச்சி வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 90 நாட்கள் நடைபெற்றுள்ளது.

#image_title
மீதம் 25 சதவீதம் காட்சிகள் மட்டுமே படமாக வேண்டி இருக்கின்றது. அதற்கு இடையில் நடிகர் அஜித்துக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தற்போது ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் ஒரு சேசிங் காட்சியின் நடைபெற்று இருந்தது. அதனை படமாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள்.

#image_title
அதில் நடிகர் அஜித் வில்லன் ஆரவுடன் அதிவேகமாக செல்லும்போது கார் கவிழும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றது. கார் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் என்ன ஆயிற்று என்ற பதட்டத்துடன் ஓடி வந்து பார்க்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
https://twitter.com/LycaProductions/status/1775798815926395119