LATEST NEWS
அடேங்கப்பா.! அனிருத் திருமண வரவேற்பில் மாஸ் காட்டிய CM விஜய்.. உடையின் விலை மட்டும் இத்தனை லட்சமா..? வாயைப்பிளக்கும் இணையவாசிகள்…!!
அனிருத் மற்றும் காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்யின் உடை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விழாவில் அவர் அணிந்திருந்த நேவி புளூ நிற உடையின் மொத்த மதிப்பு சுமார் ₹3.80 லட்சம் இருக்கலாம் என ஃபேஷன் டிசைனர்கள் கணித்துள்ளனர்.
உடையின் தனித்தனி விவரங்களின்படி, அவர் அணிந்திருந்த நேவி புளூ சூட் மட்டும் சுமார் ₹2.30 லட்சம் மதிப்புடையது எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த உடையில் பொருத்தப்பட்டிருந்த தங்க பட்டன்கள் ₹1.47 லட்சம் மற்றும் பாக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த சதுர வடிவிலான சில்க் துணி ₹7,500 மதிப்பு கொண்டிருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் இந்த எளிமையான அதே சமயம் ஆடம்பரமான தோற்றம் விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இந்த உடையின் விலை குறித்த கணிப்புகள் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
