மகள் குறித்து அவதூறு பரப்பிய விவகாரம்.. அர்ஜுன் கொடுத்த புகாரால் கைதாகும் பயில்வான் ரங்கநாதன்..? சினிமா வட்டாரத்தில் பரபரப்பு.!! – cinefeeds
Connect with us

CINEMA

மகள் குறித்து அவதூறு பரப்பிய விவகாரம்.. அர்ஜுன் கொடுத்த புகாரால் கைதாகும் பயில்வான் ரங்கநாதன்..? சினிமா வட்டாரத்தில் பரபரப்பு.!!

Published

on

நடிகர் அர்ஜுன் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் மற்றும் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் அர்ஜுன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 19-ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், முதற்கட்ட நடவடிக்கையாக பயில்வான் ரங்கநாதனை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in