CINEMA
“நான் பெண் குழந்தையின் அப்பா ஆகிவிட்டேன்..” திருமண நாள் முடிந்த 2 நாட்களில் கிடைத்த தேவதை..! நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்..!!
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இளம் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் – அகிலா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தனக்குக் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குழந்தையின் பிஞ்சுக்கரங்களை அவர் பிடிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவேற்றி, “அதிகாரப்பூர்வமாக நான் ஒரு பெண் குழந்தையின் அப்பா ஆகிவிட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அகிலாவை அபிஷன் ஜீவிந்த் திருமணம் செய்துகொண்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளைத் தம்பதியினர் கொண்டாடியிருந்தனர். அதுதொடர்பான புகைப்படத்தையும் அபிஷன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். திருமண நாள் முடிந்த கையோடு தங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை அவர் வெளியிட்டுள்ளதால், ரசிகர்களும் திரைத்துறையினரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/DfOWPWyp7fU/?utm_source=ig_web_button_share_sheet
மே 2025-ல் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலம் அபிஷன் இயக்குநராக அறிமுகமானார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் மாறினார். தற்போது சில படங்களில் முக்கியப் பங்கு வகித்து வரும் அவர், அடுத்த ஆண்டு தான் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
