CINEMA
ஒரே மேடையில் விஜய் – சங்கீதா.. ஆனாலும் தனித்தனியே என்ட்ரி.. அனிருத் திருமண வரவேற்பில் நடந்தது என்ன..? இணையத்தில் செம வைரல்..!!
சென்னையில் நேற்று நடைபெற்ற பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத்தின் காவியா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.
மணப்பெண் வீட்டார் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே சங்கீதா இந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விழாவிற்கு முதலமைச்சர் விஜய் ஒருபுறமும், சங்கீதா தனிப்பட்ட முறையிலும் வருகை தந்து மணமக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டனர்.
ஏற்கனவே சங்கீதா தனது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், ஒரே விழாவில் இருவரும் பங்கேற்ற போதிலும் தனித்தனியாக வந்து சென்றிருப்பது, சமூக வலைதளங்களிலும் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
