26 வருடங்கள் ஆகியும் குறையாத காதல்… கரில் ஷாலினியிடம் அஜித் சொன்ன அந்த ‘3 வார்த்தைகள்’… இணையத்தைக் கலக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CINEMA

26 வருடங்கள் ஆகியும் குறையாத காதல்… கரில் ஷாலினியிடம் அஜித் சொன்ன அந்த ‘3 வார்த்தைகள்’… இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

Published

on

தமிழ் திரையுலகின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரத் தம்பதியான அஜித்குமார் – ஷாலினி இணைந்து காரில் லாங் டிரைவ் சென்ற அழகிய தருணத்தை நடிகை ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலினி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் அஜித் குமாருடன் காரில் பயணிக்கும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்குக் கீழே, “Music, love & a long drive..❤️❤️❤️” (இசை, காதல் மற்றும் ஒரு நீண்ட பயணம்) என அன்புடன் அவர் குறிப்பிட்டுள்ள வாசகம் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Advertisement

ஷாலினி வீடியோ எடுக்கும் போது பின்னணியில் காதல் பாடல் பாட, அஜித்குமார் ‘I LOVE YOU’ என்று கூற, பார்க்கவே அழகான தருணமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார் ஷாலினி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாகத் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தருணங்களை அதிகம் வெளியில் பகிராத அஜித் – ஷாலினி தம்பதியின் இந்த எளிமையான மற்றும் அன்பான வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெண்டாகத் தொடங்கியது.

Advertisement

அஜித் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து, “என்றென்றும் எவர்கிரீன் ஜோடி”, “காதலுக்கு சிறந்த உதாரணம் அஜித் – ஷாலினி” என லைக்ஸ்களையும், வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர். 1999-ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது காதலிக்கத் தொடங்கிய அஜித் குமார் மற்றும் ஷாலினி, 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் ஷாலினி, இப்போதுஅஜித் குமாருடன் இருக்கும் அழகிய தருணங்களைப் பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in