“அவங்களாம் தெய்வம்.. அவங்களுக்கு கோயில் கட்டி கும்பிடணும்…” நர்ஸ்கள் பற்றி உருக்கமாகப் பேசிய நடிகர் பொன்னம்பலம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அவங்களாம் தெய்வம்.. அவங்களுக்கு கோயில் கட்டி கும்பிடணும்…” நர்ஸ்கள் பற்றி உருக்கமாகப் பேசிய நடிகர் பொன்னம்பலம்..!!

Published

on

நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டியில் நர்ஸ்களைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். சிறுநீரக பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நர்ஸ்கள் செய்த சேவையை நினைவுகூர்ந்த அவர், தன் மீதுள்ள நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு நர்ஸ்கள் தமக்கு அர்ப்பணிப்புடன் பணிவிடை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 20 வயதே ஆன இளம் நர்ஸ்களும் கூட அருவருப்பு பாராமல் இந்தச் சேவையைச் செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய பொன்னம்பலம், தன்னைப் பொறுத்தவரை நர்ஸ்கள் தெய்வங்கள் என்றும், அவர்களுக்குக் கோயில் கட்டி கும்பிட வேண்டும் என்றும் தனது நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in