CINEMA
“அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாத்த முடியாது” ஒரு மனநோயாளியை சரிசெய்ய … வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் விவகாரத்தில் சேரன் கொடுத்த விளக்கம்..!!
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் குறித்து இயக்குநர் சேரன் விரிவான விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசியுள்ள இயக்குநர் சேரன், “அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்தது. சிலர் நான் அவரை நிகழ்ச்சியில் அனுமதித்திருக்கவே கூடாது எனவும், ‘சேரனுக்கு இது தேவையா?’ எனவும் என்னிடம் கேட்கிறார்கள், சொல்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு மனநோயாளி சாலையில் கிடப்பதைப் பார்த்து அப்படியே கடந்து செல்பவன் அல்ல நான். அவனைச் சரிசெய்து விடமாட்டோமா என்ற எண்ணமே எனக்குள் இருந்தது. இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டுச் சாலையில் கிடப்பான் என்பதால், பாவம் ஒரு உயிர் எனக் காப்பாற்றி, புத்தி சொல்லிச் சரிசெய்யவே நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரு உயிர் போய்விட்டால், அவனை நம்பி இருக்கும் மற்ற உயிர்கள் பாதிக்கப்படுமே எனக் கவலைப்படுபவன் நான். அவர் பேசுவதால் என் படைப்புகள் தாழ்ந்துவிடப் போகிறதா என்ன?” என்றும் இயக்குநர் சேரன் தனது விளக்கத்தில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
