LATEST NEWS
FLASH: வீட்டுக்காவலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.. வீட்டை சுற்றி போலீஸ்.. பெரும் பரபரப்பு..!!
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்கச் செல்லவிருந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் செல்லத் தயாராக இருந்த நயினார் நாகேந்திரனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதன் காரணமாக, திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள அவரது இல்லத்தைச் சுற்றிலும் காவல் ஆய்வாளர் தலைமையிலான ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
