LATEST NEWS
“கேவலத்தின் உச்சம்” தவெக எம்எல்ஏ பாவமா..? பதவிக்காக இப்படி மாரடிப்பதா..? திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்துள்ள புகார் விவகாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித்தலைவர்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பக்கம் நிற்காமல், பதவிக்காகச் சில கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட தவெக எம்எல்ஏ-விற்கு ஆதரவாக (“பாவம் என”) முட்டுக் கொடுப்பது ‘கேவலத்தின் உச்சம்’ என சாடியுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகும், குற்றச்சாட்டிற்கு உள்ளான நபர் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, புகார் எதுவும் பெறப்படவில்லை என நீதிமன்றத்திலேயே அரசுத் தரப்பில் பொய் சொல்வது மிகுந்த கண்டனத்திற்குரிய செயல் என்றும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், உயர் நீதிமன்றக் கேள்வியைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் முறையான புகார் அளித்துள்ளார் . அதே சமயம், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனத் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ள நிலையில், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
