LATEST NEWS
சட்டம் – ஒழுங்கு கெட்டதே திமுக ஆட்சியில தான்… Compare பண்ணுங்க பார்ப்போம்.. திமுகவை ஒற்றை ஆளாக நின்று அலறவிட்ட வைகோ..!!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டது திமுக ஆட்சியில்தான் என்று குற்றம் சாட்டியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என திமுகவுக்குப் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்துத் திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய வைகோ, முந்தைய திமுக ஆட்சியின் போதுதான் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாகச் சீர்கெட்டிருந்ததாகக் கடுமையாகச் சாடியுள்ளார். இரு ஆட்சிகளின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தயாரா என்று கேள்வி எழுப்பிய அவர், உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த விவாதமே சிறந்த வழி எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் திமுகவுக்கு நேரடிச் சவால் (“I Make a Challenge”) விடுத்துள்ள வைகோ, திமுக தலைமை அறிவிக்கும் எந்தத் தேதியிலும், எந்த இடத்திலும், எந்த மேடைக்கும் நேரில் வந்து விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். அந்த விவாத மேடைக்கு திமுக தனது கட்சியின் ஜாம்பவான்களை அனுப்பி வைக்கட்டும் என்றும், அனைத்திற்கும் தக்க ஆதாரங்களுடன் பதிலளிக்கத் தான் காத்திருப்பதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். வைகோவின் இந்தப் பகிரங்கச் சவால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
