LATEST NEWS
“பணத்துக்கெல்லாம் மசிய மாட்டாரு” தலைகீழாக நின்ற அனில் அகர்வால்… மறுத்த முதல்வர் விஜய்… ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ உடைத்த பரபரப்பு ரகசியம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக, வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கப் பலமுறை முயன்றும், அதற்கு விஜய் அனுமதி மறுத்துவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எந்தவொரு முதலமைச்சரையும் கோடிகளைக் கொட்டி விலைக்கு வாங்கவோ அல்லது ஆட்சியைக் கவிழ்க்கவோ முடிந்த அனில் அகர்வால், முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க “தலைகீழாக நின்று” முயற்சி செய்ததாகவும், ஆனால் முதலமைச்சர் விஜய் அவரைச் சந்திக்கத் துளியும் அனுமதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி மக்களின் நலனையும் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் முதலமைச்சர் விஜய் இருப்பதையே இது காட்டுவதாக வைகோ பாராட்டியுள்ளார். மேலும், “இதைவிட முதலமைச்சர் விஜய்யின் நேர்மைக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் தாம் தொடர்ந்து எதிர்ப்பேன் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
